Monday, August 9, 2010

இணையத்தில் இளம்பெண் வேட்டை. பொறி வைத்து பிடித்த ஸ்கை செய்தி குழுவினர்.

சைமன் பியர்ட், 56 இளைஞர் ஆலோசகராக பணிபுரிவதாக கூறிக்கொண்டு பல இளைஞர்களுடன் பாலியல் ரீதியாக தவறாக பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார்.

இணையத்தில் இருக்கும் பொது அரட்டை அறைக்குள் சென்று இளம் வயது பெண்களை தேடி அவர்களுடன் பேசுவது பின் அரட்டையை பாலியல் ரீதியில் திசை திருப்புவது உள்ளிட்ட வேலைகளை ஆறு வாரங்களாக முனைப்புடன் செய்து வந்த இவரை ரகசியமாக படம் பிடித்தனர் ஸ்கை செய்தி குழுவினர்.


தான் நிருபர்களால் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரியாமல் 13 வயது சிறுமி அமியுடன் நட்புடன் முதலில் அரட்டையை துவங்கினார். முதலில் இணைய காமெராவில் தன படத்தை போட்ட சைமன் , பின் சிறுமி அமியையும் இணைய காமெராவில் வருமாறு வலியுறுத்தினார்.


பின்னர் சிறிது சிறிதாக பாலியல் ரீதியாக அரட்டையை திசை திருப்பிய சைமன் ஒரு கட்டத்தில் சிறுமியிடம் தன்னுடன் பாலியல் ரீதியில் உறவு வைத்துக் கொள்ளத் தயாரா என்றும் கேட்டதோடு இதை வெளியில் கூறி தன்னை போலீசில் மாட்டி விடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.


பின்னர் இருவரும் சந்திப்பதென முடிவு செய்யப்பட்டு சைமன் அவர் வீட்டிலிருந்து கிளம்புவது முதற்கொண்டு குன்னேர்ஸ்புரி ரயில் நிலையத்தில் இருவதும் சந்திப்பது அனைத்தும் படம் பிடிக்கப்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் ஊடகத்தினால் தான் படம் பிடிக்கப்படுகிறோம் என்பது தெரிந்து ஓடினார் சைமன்.


பின்னர் ஒரு கட்டத்தில் இணையத்தில் இது போன்று சிறுமிகளை தேடித் பிடித்து அவர்களை பாலியல் ரீதியில் தயார் செய்வது தனக்கு கை வந்த கலை என்றும் தான் செய்வது சட்டத்திற்கு புறம்பானது எனத் தெரியும் எனவும் ஸ்கை செய்தி நிறுவனத்திடம் ஒப்புக் கொண்டார்.


தற்போது சிறுவர்களை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது


http://www.youtube.com/watch?v=33ocFnxDcQQ&feature=player_embedded

Wednesday, August 4, 2010

தேர்தலில் ஓட்டு போட மக்கள் மட்டுமல்ல, மந்திரியும் பணம் வாங்கும் கொடுமை.

Buy money to put vote.ஜார்கண்ட் மாநிலத்தில் டெல்லி மேல்-சபைக்கு 2 எம்.பி.க்கள் தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடந்தது. மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு அவர்களை தேர்வு செய்தனர். எம்எல்.ஏ.க்கள் கட்சி கட்டளைப்படிதான் ஓட்டு போடுவார்களா? அல்லது பணம் வாங்கி கொண்டு வேறு வேட்பாளருக்கு ஒட்டு போடுவார்களா? என கண்டறிய சி.என்.என்.-ஐ.பி.என். டி.வி. நிறுவனம் அதிரடி வேட்டை ஒன்றில் ஈடுபட்டது.

நிருபர்களை புரோக்கர்கள் போல அனுப்பி பல எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வைத்தனர். தொழில் அதிபர் ஒருவருக்கு ஓட்டு போட்டால் பணம் தருவதாக அவர்கள் கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட எம்.எம்.ஏ.க்கள் எவ்வளவு பணம் தருவீர்கள் என்று பேரம் பேசினார்கள்.

இந்த உரையாடல்கள் அனைத்தையும் ரகசிய வீடியோ மூலம் பதிவு செய்த அவர்கள் டி.வி.யில் ஒளிபரப்பு செய்தனர். அதில் காங்கிரஸ், ஜார்கண்ட முக்தி மோர்ச்சா, பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிக்கினார்கள்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பி உள்ளது. கட்சி மேலிடங்களும் நோட்டீசு அனுப்பி உள்ளன.

இதில் சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ, ராஜேஷ், ராஞ்சியில் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

மேல்-சபை எம்.பி. தேர்தலில் ஓட்டுப்போட பணம் கேட்டது உண்மைதான். இது எனது தனிப்பட்ட விஷயம். இதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

நான் பணம் கேட்டேனே தவிர பணம் வாங்கவில்லை. எனவே இதில் குற்றம் நடக்கவில்லை. இதனால் என்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

தனிப்பட்ட முறையில் நாங்கள் பலவிஷயங்களை பலரிடம் பேசலாம். அதைப்போலத்தான் இதிலும் பேசி இருக்கிறோம். யாரோ சதித்திட்டம் செய்து எங்களை சிக்க வைத்து இருக்கிறார்கள்.

நாங்கள் தவறு செய்து இருந்தால் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கலாம். நாங்கள் பணம் எதுவும் வாங்கவில்லை. நாங்கள் பணம் வாங்கியதற்கான ஆதாரங்களும் இல்லை. எனவே எங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.